இலங்கை அணி வீரர்கள், மது அருந்தியுள்ளார்களாக..? திடீர் சோதனை நடத்த முடிவு
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என்பது குறித்து திடீர் சோதனை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் விசேட பலூன்கள் ஊடாக வீரர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன மது போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த வாரத்தில் மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கிரிக்கட் வீரர்களிடம் இவ்வாறு திடீர் சோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மது அருந்தியிருந்தால் அவ்வாறான வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment