எர்துவானுக்கு விடுக்கும் எச்சரிக்கை,, “ஏதாவது குறை இருந்தால் அதனை சரிசெய்வது எமது பொறுப்பு” என்றார்
துருக்கியில் கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரிசப் தையிப் எரிதுவானின் கட்சி, உள்ளூர் தேர்தலில் தலைநகர் அங்காராவில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
மிகப்பெரிய நகரான இஸ்தான்பூலின் மேயர் பதவிக்கான போட்டியிலும் எதிர்க்கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தேசிய அளவில் எர்துவானின் ஏ.கே.பி தலைமையிலான கூட்டணி 51 வீதத்திற்கு அதிகமான வாக்குளை வென்று மாநாகர சபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எர்துவானுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு அண்மைக்காலத்தில் வீழ்ச்சி கண்டிருப்பதோடு 2018 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்திருந்தது.
தேர்தல் முடிவு பற்றி கருத்து வெளியிட்ட எர்துவானா, “ஏதாவது குறை இருந்தால் அதனை சரிசெய்வது எமது பொறுப்பு” என்றார்.
அங்காராவில் மதச்சார்பற்ற மக்கள் குடியரவு கட்சியின் வேட்பாளர் மன்சூர் யாவாஸ் வெற்றியீட்டியுள்ளார். சுமார் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அவர் 51 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு ஏ.கே.பி கட்சியின் மெஹ்மட் ஒசாசிக்கி 47 வீத ஆதரவு கிடைத்துள்ளது.
1994 ஆம் ஆண்டு எர்துவான் மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரது கட்சியின் கோட்டையாக இஸ்தான்பூல் நகர் உள்ளது. இங்கும் எதிர்க்கட்சியின் எக்ரம் இமாமொக்லு வெறும் 28,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment