தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடைசெய்ய, விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்
தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடை செய்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகப்பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.
தற்போது இலங்கை சட்டத்திட்டங்களின்படி, தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை.
இந்த நிலையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அந்த அமைப்பை தடை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு மறுதினமே இந்த அமைப்பை தடை செய்வது குறித்து சிந்திக்கப்பட்டது.
எனினும் இலங்கையில் அதற்கான சட்டத்திட்டங்கள் இல்லை.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எழுந்தப் பின்னர் உலகின் பலநாடுகள் புதிதாக தங்களது அரசியல்யாப்பில் அந்த அமைப்பை தடைசெய்வதற்கான சட்டங்களை இணைத்தன.
அவ்வாறான சட்டம் இலங்கையில் இன்னும் இயற்றப்படவில்லை.
இந்த நிலையில் தமக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் குழு ஒன்றிடம் இந்த சட்டமூலத்தை வரைவதற்கான பொறுப்பை வழங்கி இருப்பதாகவும், எதிர்வரும் இரண்டொரு தினங்களில் இந்த சட்டமூலம் இறுதிசெய்யப்பட்டு பின்னர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Pls very soon.if tomorrow also we are happy
ReplyDelete