Header Ads



சஹ்ரானின் உரைகளை, தடைசெய்ய நடவடிக்கை


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவர்கள் இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.