தேசிய தவ்ஹீத் ஜமாத்தை, ஷஹ்ரான் ஆரம்பித்தாலும் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார் - தேசிய தவ்ஹீத் ஜமாத்
பொதுமக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கொல்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது என தேசிய தௌவீக் ஜமாத்தின் தலைவர் தௌபீக் மௌலவி தெரிவித்தார்.
தேசிய தௌவீக் ஜமாத் மௌலவி ஷஹ்ரான் என்பவரினால்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் காலப்போக்கில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போக்கினை கொண்டிருந்ததன் காரணமாக தமது அமைப்பில் இருந்து விலக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடியில் உள்ள தேசிய தௌவீக் ஜமாத்தின் பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
தேசிய தௌவீக் ஜமாத் மௌலவி ஷஹ்ரான் என்பவரினால்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் காலப்போக்கில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போக்கினை கொண்டிருந்ததன் காரணமாக தமது அமைப்பில் இருந்து விலக்கப்பட்டார். அதன்காரணமாக மௌலவி ஷஹ்ரான் என்பவருக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தமது அமைப்பு மௌலவி ஷஹ்ரானால் ஆரம்பிக்கப்பட்டபோதும் 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஏற்பட்ட கலவரம்; ஒன்றையடுத்து அவர் தலைமறைவாகியிருந்த நிலையில்
அரசாங்கக்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவந்த நிலையில் அவரை தமது அமைப்பில் இருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாம் என்பது தெளிவான மார்க்கம். இஸ்லாத்தின் சட்டங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களையும் பெண்களையும் கொலைசெய்யக்கூடாது என இஸ்லாம் தெளிவாக கூறியுள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல்களில் பல சிறுவர்களும் பெண்களும் உயிரிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டவர்கள் உண்மையான இஸ்லாமியராக இருக்கமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள் எமது அமைப்பின் மீது குற்றங்களை முன்வைத்தாலும் இந்த தாக்குதலுக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனம் அவர் தெரிவித்தார்.
டூப்பு
ReplyDeletepoda mairu. ketta harag kuttyhal. allah ungalai naasamaakattum.ungalai walhipaduvavarhalai naasa maakatum
ReplyDeleteungal meethu irraiwanin naasamundahattum.
kayavarkal ippothu vilakamalithu thappikka munaihiraarkal.
ya allah ivarkalaiyum ivarkalin kootathayum naasamaki viduvaayaha