மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம், ஒரு பயங்கரவாதியை தப்பவிட்டால்கூட ஆபத்து - ரணில்
இலங்கையில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அதிகாரிகள் தற்போது பதுங்கியிருக்க கூடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இவ்வாறு பதுங்கியுள்ளவர்கள் மற்றுமொரு சுற்று தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார்
பொலிஸார் அனைவரையும் தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆபத்து பெருமளவிற்கு குறைவடைந்துள்ளது,ஆனால் பதுங்கியுள்ள சிலரை அடுத்த சில நாட்களில் கைதுசெய்யவேண்டும் இதனை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஒரு பயங்கரவாதியை கூட தப்பவிட்டால் பாரிய சேதமேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்
இதன்காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றோம் அனைவரும் கைதுசெய்யப்படுவதை உறுதி செய்யவிரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் இருவர் தேவாலயங்களை மீண்டும் இலக்குவைக்கலாம் என்ற கவலை காணப்படுகின்றது ஒருவரே பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
NEe oru yahoodi.agent of mossad
ReplyDeleteIthatku pirahu Muslim unp mp kalin nilaipaatai paarpom ivarhaluku samuha akkarai unndanu,....
ReplyDelete