முஸ்லிம் உறவுகளே இது, உங்களின் அவசர கவனத்திற்கு...!
#நாட்டில்_சட்டதிட்டங்கள்_இனிவரும்_நாட்களில்_கடுமையாக_இருக்கலாம்.
சில விடயங்களை உங்களுக்காக சொல்ல விரும்புகிறேன்.
#முடிந்தால்_நண்பர்களுடன்_பகிர்ந்து_கொள்ளுங்கள்_!
1. உங்கள் #அடையாள அட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். காரியாலய அடையாள அட்டையும் இருப்பது உகந்தது. அது உங்களை அந்த பிரதேசத்தில் வதிபவராக அடையாளப்படுத்தும்.
2. யாருக்கும் தெரியாமல் குப்பைகளை வீதியில் இரவில் கொண்டு போய் வைப்பது போன்றவற்றை தவிருங்கள்.
3. காப்புறுதி புதுப்பிக்கப்படவில்லை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை போன்ற காரணங்களுக்காக நிறுத்தாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம். உங்களை சுடுவதற்கும் அனுமதி இருக்கிறது.
4. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் பதிவுகள், பின்னூட்டங்களை தவிருங்கள்.
5. சந்தேகப்படும் பொதிகள் இருந்தால் தயங்காமல் அறிவியுங்கள். அதில் குண்டு இல்லை என்பதற்காக எல்லாம் நீங்கள் கைதுசெய்யப்பட மாட்டீர்கள்.
6. உங்களை யாராவது சந்தேகமாக பார்த்தால் சண்டைக்கு செல்லாதீர்கள். ஒவ்வொருவரும் உயிர் பயத்தில் இருப்பதை உணருங்கள்.
7. உங்கள் பெயர்களிலுள்ள நீங்கள் பாவிக்காத சிம் கார்டுகளை அத்தனை சேவை வழங்குனரிடமும் சென்று பரிசோதித்து துண்டியுங்கள்.
8. வாகனங்கள் வாங்கி விற்கும்போது உரிமையை உடனுக்குடன் மாற்றிக்கொளுங்கள். காணாமற்போன வாகனங்களை முதல் வேலையாக முறைப்பாடு செய்துவிட்டு பின்னர் தேடுங்கள். முறைப்பாட்டு பிரதி மிக முக்கியமான ஒன்று.
9. பொது இடங்களில் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பயணங்களை காரணங்களுடன் அமைத்துக்கொள்ளுங்கள். 'சும்மா நின்றேன்' போன்ற பதில்கள் பாரிய விளைவுகளை கொண்டுவரும்.
10. நிலமையை கருத்திற்கொண்டு உங்கள் பயணங்களை தீர்மானியுங்கள்.
இவை நான் பின்பற்றப்போகும் சில படிமுறைகள். உபயோகப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் புறக்கணித்துவிடுங்கள். #Copied
Good advice
ReplyDeleteGood idea
ReplyDeleteமிக முகியமான ஆலோசனைகள். எனினும் ஒரு குறை. பெண்கள் முக அடையாளத்தை மறைபது பற்றிய பிரச்சினையில் மேல்மாகாண ஆழுனர் குருநாகல் மாநகரசபை என்பவை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர். நாட்டில் முக்கியவிவதமாகியுள்ள இப்பிரச்சினைபற்றிய அறிவுறுத்தல் இல்லையே சேர்த்துக்கொள்ளவும்.
ReplyDeleteபோக்குவரத்து விதிமுறைகளை 100% கடைப்பிடியுங்கள்(speed limits,parking,over taking etc).அனுபவத்தை சொல்கிறேன்.
ReplyDelete