பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி - மகிந்த சந்திப்பு முடிவின்றி முடிந்தது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது. வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும், வரவு செலவு திட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன நாளை காலை தனித்தனியாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் சாதாரண குடிமகனுக்குத்தெரிந்த உண்மை இந்ந நாட்டின் சனாதிபதிக்கு விளங்காது தடமாறுகின்றார் என்றால் இந்த நாட்டு மக்களின் நாட்டு அரசாங்கத்துக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி சகல மக்களுக்கும் ஐக்கியமாக வாழும் சூழலையும் பொருளாதார மேன்பாட்டையும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்து மக்களின் பொது நலன் என்றபெயரில் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தனது ஊருக்கும் மாத்திரம் சேவைசெய்வதையே கருத்தில் கொண்டு இயங்கும் ஒரு நாட்டு சனாதிபதி நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை என்பதை செயல்முறையில் காட்டிவிட்டார். அடுத்த முறை பதவிக்கு வரும் ஒரே இலக்கில் இயங்கி தனது படும் எதிரி, தன்னை அழிக்க பல திட்டம் தீட்டிய எதிரிக்கு முழு ஆதரவையும் வழங்கி அவருடைய அடிமையாக தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் இந்த ஆளுக்கு தனது ஊர் மக்களுக்கு ஏதாவது செய்து விட்டுப்போகும் கிராமசேவகர் பதவி தவிர எந்தப் பதவிக்கும் தான் தகுதியற்றவர் என்பதை இந்த நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும நிரூபித்துவிட்டார். இந்த நாட்டு மக்களுக்கு கடவுள் கருணை மாத்திரம் தான் எஞ்சியிருக்கின்றது.
ReplyDelete