Header Ads



றிசாத்தை சிக்கவைத்து, கைதுசெய்ய முயற்சியா..? தற்கொலை குண்டுதாரி வாங்கிய வெற்று ரவைகள்


கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோப்புகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழிவுகளை பெற்றுக்கொள்ளும் வசதியூட்டலின் மூலமே, குறித்த வெற்று ரவைகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக அவர்  பெற்றுக்கொண்டுள்ளார் என, தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் ஒருவர் என்ற அடிப்படையில், கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தம்மை அவர் பதிவுசெய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, கொலோசஸ் பிரைவட் லிமிட்டட், இல.111/6, அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டி என்ற முகவரியில், 1611216 பதிவு இலக்கத்தில் எம்.ஐ.இன்சாப் என்ற பெயரில் இதற்கான பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இவர் வெற்று துப்பாக்கி ரவைகளை கொள்வனவுச் செய்து வந்துள்ளதுடன், செப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தமது  தொழிற்சாலைக்கு இதனை கொள்வனவுச் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு, குறித்த செப்பு தொழில்சாலையில் குண்டுகள் உற்பத்தி செய்யபப்ட்டிருக்கலாம் என, பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெற்று ரவைகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக இன்சாப் அஹமட்  கொள்வனவுச் செய்வதற்கு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை,  வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. TM

2 comments:

  1. Its nothing to do with Rishard.

    ReplyDelete
  2. Even Srilanka intelligence service know nothing about the suicide bomb attacks before it happend so is it possible to aware this by Rizad. Some ethnic and religious trouble makers against Rizad and muslims involve to fish in a troubled waters

    ReplyDelete

Powered by Blogger.