Header Ads



புர்க்காவை தடைசெய்ய யோசனை - ரணில், மங்கள கடும் எதிர்ப்பு - மனோ உள்ளிட்ட 7 அமைச்சர்கள் ஆதரவு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று -26-நடைபெற்றிருந்தது.

இதன்போது அவசர சந்தர்ப்பங்களில் 200 மெகாவோட் மின்சாரத்தை தனியார் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போதைய நிலையை கருதி, முஸ்லிம் பெண்கள் புர்க்கா அணிவதை தடை செய்வதற்கான அமைச்சரவை யோசனை ஒன்றை நீதி அமைச்சர் தலதா அத்துகோரல முன்வைத்தார்.

இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் எதிர்ப்பைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே இவ்வாறான யோசனையை கொண்டுவர முடியும் என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, மனோகணேசன், அகிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்தராணி பண்டார ஆகியோர் இந்த யோசனைக்கு ஆதரவளித்துள்ளனர்.

முஸ்லிம் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியதை அடுத்தே தாம் இந்த யோசனையை கொண்டுவந்ததாக அமைச்சர் தலதா அத்துகோரல அமைச்சரவையில் கூறியுள்ளார்.

இந்த யோசனை தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 comments:

  1. Long overdue. Do it right away. It is not required by Islam.

    ReplyDelete
  2. ரணிலின் முடிவில் அமெரிக்காவின் சிந்தனை கலந்திருக்கலாம்.

    ReplyDelete
  3. பிரதமர் ரணிலின் சிந்தனையில் முஸ்லிம்களின் மார்க்க, விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete
  4. Burqa an Niqab - both another form of EXTREMISM - Ban it immediately.

    ReplyDelete
  5. மூடாதது மார்க்கம் என்றால் மூடுவதும் மார்க்கம் தான என்பதை புரிந்து பேசுங்கள் எம் சமூக முப்திகளே... மூடுவதால் சந்தேகம் என்றால்... தாரளமாக சோதியுங்கள்... எம் நாட்டு சட்டத்திற்கும் காவல் துறைக்கும் பூரண ஒத்துழைப்பு உண்டு....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Dear muslims dont worry.this incidnt is to show who s munaafiq in this ummath.so at last victory for real muslims insha allah

    ReplyDelete
  8. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாளர்கள்?

    ReplyDelete
  9. If hatred between religion is controlled and justice is maintained in this country this country will be better than Singapore

    ReplyDelete

Powered by Blogger.