இலங்கை விவகாரங்களில் 6 வெளிநாட்டு, ராஜதந்திரிகள் நேரடித் தலையீடு - புலனாய்வுப் பிரிவு தகவல்
வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு ராஜதந்திரிகள் இலங்கை விவகாரங்களில் நேரடித் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மன், நோர்வே, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இவ்வாறு ராஜதந்திர நியதிகளை மீறிச் செயற்படுவதாக புலனாய்வுப் பிரவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்களில் இந்த ராஜதந்திரிகள் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவர்கள் அரசியல் ரீதியான 60 உடன்படிக்கைகளிலும் பாதுகாப்பு தொடர்பான 71 சம்பவங்களிலும் தலையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீனா டெப்லீட்ஸ்ஸே அதிகளவில் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post a Comment