நீர்கொழும்பிலுள்ள பாகிஸ்தானியர்கள் தொடர்பில் அச்சம் - 600 பேர் வேறிடங்களுக்கு மாற்றம்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் காணப்படுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து குறித்த குழு நீர்கொழும்பில் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வௌியேறுமாறு அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கூறியிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
குறித்த பாகிஸ்தான் நாட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment