தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக 5 வீடுகளுக்கு சீல்
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தெஹிவளை ,பாணந்துறை சரிக்காமுல்ல,கொள்ளுப்பிட்டி ,வத்தளை ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் விசாரணைகளின் பொருட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இன்ரபோல் ,எப்.பி ஐ ,ஸ்கொட்லன்ட்யார்ட் உட்பட்ட பல உயர்மட்ட வெளிநாட்டு பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் விசாரணைக்காக இலங்கை வந்துள்ளன.
தாக்குதல் சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதுவரை 70 பேர் குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(தற்கொலைதாரி இம்சாத் 2016 தேசிய ஏற்றுமதி விருதை பெறும் சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட படம் இணைக்கப்பட்டுள்ளது )
All educated and talented rich peoples are brainwashed to kill themselves are Islamic? ISIS is a cult any body joined, it it is end of the world. May be ISIS is using drugs to change the mind set up of who join it.
ReplyDelete