பள்ளிவாசலுக்குள் 50 பேரை கொன்ற பயங்கரவாதி: ஆடியோ இணைப்பு மூலம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
நியூசிலாந்து மசூதியில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி 50 பேரை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதி Brenton Tarrant இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மார்ச் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட Brenton Tarrant மார்ச் 16 ஆம் திகதி வெள்ளை சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆக்லாந்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு மேற்படி விசாரணை ஏப்ரல் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.
ஆனால், இந்த முறை பலத்த பாதுகாப்புடன் ஆக்லாந்து சிறையில் இருந்தபடியே ஆடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது தான் ஒரு வெள்ளையின மேலாதிக்கவாதி என கைகளால் அடையாளம் காட்டிக்கொண்டார். தற்போது நடைபெற்ற விசாரணை குறித்த மேலதிக தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.
மேலும், அடுத்த விசாரணை எப்போது என்று விரைவில் நீதிபதியால் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
Post a Comment