பள்ளிவாசலை தாக்க திட்டம் - சிங்களப் பெயரில் தங்களை அறிமுகம்செய்த 2 பேர் கைது
பேருவளை புஹாரி முஸ்லிம் பள்ளிவாயலுக்கு தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் இரு முஸ்லிம் நபர்கள் களுத்துரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு இளைஞர்களும் சிங்களப் பெயரில் தங்களை அறிமுகம் செய்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏதாவதொரு முஸ்லிம் அடிப்படைவாத குழுவொன்றுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் பேருவளையிலுள்ள பிரபல முஸ்லிம் பள்ளிவாயலாக காணப்படும் புகாரி பள்ளிக்கு தாக்குதல் நடாத்த திட்டமிட்டம் வைத்திருந்தமை அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தேசிய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.
Post a Comment