தற்கொலை குண்டுவெடிப்பில், இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது சுகாதார அமைச்சு
இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு.
இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம்.
கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு.
தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம்.
முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Post a Comment