நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், பாடசாலைகளில் தஞ்சம் - இதுவரை 20 பேர் கைது
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நம் நாட்டில் வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பவர்கள் உங்கள் வீடுகளில் யார் எதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார்கள் என்று ஆராயுங்கள் ஏதாவது சந்தேகத்திட்கு இடமிருந்தால் பாதுகாப்புதுறைக்கு அறிவியுங்கள் சுமார ஒருவருட காலங்களில் யாராவது உங்கள் வீடகளில் அல்லது உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வாடகைக்கு வந்திருந்தால் அவ்வீட்டை நன்றாக கவனியுங்கள் ஏதாவது சந்தேகமுறையிலிருந்தால் காவல் நிலையதிட்கு தெரிவியுங்கள் நம் நாட்டு பாதுகாப்பு அமைப்புக்கு உதவி செய்து நம் நாட்டையும் நம் இஸ்லாமிய வாழ்வையும் பாதுகாப்போம்
ReplyDelete