Header Ads



பயங்கரவாதிகளுக்கு எதிராக 12 முஸ்லிம், அமைப்புக்கள் விடுத்துள்ள முக்கிய செய்தி

ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு சமூகத்தினதும் கொலையாகக் கருதுமளவிற்கு இஸ்லாம் மனித உயிருக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. 

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பொன்றாகும். இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் இந்த தீவிரவாத அமைப்புக்களோடு எவரேனும் தொடர்புகளை ஏற்படுத்தனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எவரொருவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

நாட்டிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

2 comments:

  1. தௌஹீத் ஜமாஅத்
    என்றும் சிறப்புவரி
    ஒன்றை சேர்த்திருந்
    தால் சிங்கள பெரும்
    பான்மை சமூகத்துக்கு
    ள் எமது நிலைப்பாடு
    இன்னும் தெளிவாக
    ஒலிக்கும்.

    ReplyDelete
  2. சகோதரரே

    ஒருசில பயங்கரவாதிகள் - தௌகீத் என்ற வாசகத்தைப் பிழையாக விளங்கி அதைப்பிழையான வழியில் பாவித்ததற்காக தௌகீதை விட்டுவிடாதீர்களள் - தௌகீத் என்றால் இறைவன் ஒருவன் மாத்திரமே என்பதாகும் - தௌகீத் இல்லாது இஸ்லாம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.