மோடிக்கு எதிராக எழுந்த கோஷம் - அதிர்ந்த IPL கிரிக்கெட் மைதானம்
இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக ஐ.பி.எல் போட்டியின்போது பெரிய அளவில் கோஷங்கள் எழுப்பப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
பிரதமர் மோடி தன்னை சவுக்கிதார் (காவலாளி) என்று அழைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க கட்சியினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்கள் பெயருடன் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டனர்.
இதனை வைத்து பா.ஜ.க கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக வேறு மாதிரி பிரச்சாரம் செய்து வருகின்றன. அதாவது ‘சவுக்கிதர் சோர் ஹேய்’ என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் காவலாளி தான் திருடன் என்பதாகும். இது இணையதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, நேற்று நடந்த பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் எதிரொலித்தது.
போட்டியைக் காண வந்த ரசிகர்கள் பலர், ஒவ்வொரு பந்துகள் வீசப்படும்போதும் ‘சவுக்கிதார் சோர் ஹேய்’ என்று கோஷம் எழுப்பினார்கள். ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மிக மோசமாக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் கிரிக்கெட் போட்டியில் கூட மோடிக்கு இவ்வளவு எதிர்ப்பு நிலவுகிறதா என்று கூறி வருகின்றனர்.
Post a Comment