Header Ads



பால்மாவில் பன்றி கொழுப்பு இல்லை." HALAL" நிபுணர்களின் ஆதாரமும், அதற்கான விளக்கமும் (வீடியோ)



நியூஸிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முழுஆடை பால்மாவில் பன்றி கொழுப்பு கலக்கப்படடுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுமுள்ளி வைக்கும் வகையில், அகில இலங்கை ஹலால் சான்று உறுதி பேரவையால் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் முழுஆடை பால்மாவிற்கு ஹலால் சான்றிதழை வழங்கியுள்ளது.

அகில உலக ஹலால் சான்று உறுதி பேரவையால் அங்கீகாரிக்கப்பட்ட ஆய்வுக்கூடமான  Globally Accepted  என்ற தாய்லாந்தில் இயங்கி வரும் ஆய்வுக்கூடத்திற்கு அகில இலங்கை ஹலால் சான்று உறுதி பேரவை வழங்கிய  இலங்கை சந்தையில் விற்பனைக்கு இருந்த முழுஆடை பால்மாவை அவ்வாய்வுக்கூடம்  பல பரிசோதனைகளை மேற்கொண்டு வழங்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட முழுஆடை பால் மாவில் எவ்வித பன்றி கொழுப்பும் கலக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சான்றிதழ் கொண்டே அகில இலங்கை ஹலால் சான்று உறுதி பேரவை நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் முழு ஆடை பால்மாவில் எவ்வித பன்றி கொழுப்பும் கலக்கப்படவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=QGZJZzJgnJs&feature=youtu.be

1 comment:

  1. How much did these beard people got?. They are bluffing and they are not expert in chemistry. (Now big milk companies are trying their best to sell milk powder again. We can not believe Jam athul Ulama so-called educated body and those wearing long jubba)

    ReplyDelete

Powered by Blogger.