கோத்தா, கோத்தா என்ற குரல் ஒலித்து வருகிறது - இரட்சகர் வந்து விட்டார்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே இறுதி பேருந்து அதில் ஏறவில்லை என்றால், எப்போதும் எதிர்பார்த்த பயணத்தை மேற்கொள்ள முடியாது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஹோமாகமையில் இன்று -27- நடைபெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பு சிதைந்து போன இனத்திற்கு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரட்சகர் வந்து விட்டார் என்ற செய்தி இரண்டு செவிகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால், இன, மத, கட்சி பேதமின்றி அனைத்து தரப்பிலும் இருந்து கோத்தா, கோத்தா என்ற குரல் ஒலித்து வருகிறது. இதுதான் இறுதி பேருந்து, இந்த பேருந்தில் ஏறாவிட்டால், எமது பயணத்தை எம்மால் எப்போதும் செல்ல முடியாது போகும்.
இந்த தாய் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், எமது பிள்ளைகளுக்கு நாடு மீதமிருக்க வேண்டுமாயின், வாழ்நாள் முழுவதும் அமைதியாக அழகான நாட்டில் வாழ வேண்டும் என்றால், தாய் நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
இது எமது தாய் நாட்டை மீண்டும் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்லும் தருணம். அன்று எமது இளைஞர்கள் வடக்கிற்கு சென்று போரிட்ட போது எம்மால் போர்க் களத்திற்கு செல்ல முடியவில்லை. தற்போது போர்க் களத்திற்கு செல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அது அடுத்த ஆறு மாதங்களில் வரப் போகும் ஜனாதிபதித் தேர்தல்.
இம்முறை எமது போர்க் களம் ஜனாதிபதித் தேர்தல் களம். நாம் துப்பாக்கிகளுடன் அங்கு செல்ல போவதில்லை. அறிவார்ந்த ஆயுதத்துடன் இந்த போர் களத்திற்கு செல்ல போகிறோம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment