Header Ads



அரசாங்கத்தை மக்கள் திட்டுகின்றனர், விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் - திட்டிய மைத்திரி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று -26- கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் அமுலாகும் மின்சார விநியோகத் தடை தொடர்பில், கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் அரசாங்கத்தை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இப்படியே சென்றால் விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.