Header Ads



அழிக்க நினைத்தாய் இஸ்லாத்தை, அல்லாஹ் விதைத்திருக்கிறான்...!


 - யாழ். அஸீம் -

இறையில்லத்தில் 
ஒரு வெறிகொண்ட விலங்கொன்று
துப்பாக்கி ரவைகளைத் 
துப்பியது...

இறையில்லத்தில் 
இனவெறியைக் கக்கிய
வெறி கொண்ட விலங்கே!
உன் கடவுள் யார்?
பாலகர், பெண்கள்
வயோதிபர்களை 
பதைபதைக்கக் கொன்ற
பாதகனே! – நீ
அவர்களை மட்டும் 
கொல்லவில்லை
உன் கடவுளையும் 
கொன்று விட்டாய்!
வெள்ளை மேலாதிக்க 
வெறி கொண்ட விலங்கே!
உன் வேதம் எது?
இனவெறியா? மதவெறியா?
உன் வேத வரிகளைத்தான் 
துப்பாக்கி உடலில் 
எழுதி வைத்தாயோ?

இஸ்லாத்தை 
அழிக்கவந்த எதிரியே! - உன்னால் 
இறையில்லத்தில் 
இரத்தக்கறை படிந்தது...
இஸ்லாத்தின் மீது 
எதிரிகள் பூசிய 
பயங்கரவாதக் கறை கரைந்தது!

இறையில்லத்தில் 
உன் துப்பாக்கி வெடித்தது
நியூசிலாந்து பாராளுமன்றத்தில்
இறைவசனம் ஒலித்தது.

நீ 
இறையில்லத்தில் 
துப்பாக்கி ரவைகளை சொரிந்தாய்
நியூசிலாந்து மக்களோ
மலர்களை சொரிந்தனர்
அன்பின் அடையாளமாய்
ஆயிரம் மலர் வளையங்கள் 
இறையில்லத்தின் முன் குவிந்தன

நீ
அழிக்க நினைத்தாய் இஸ்லாத்தை 
அல்லாஹ் விதைத்திருக்கிறான். 
நியூசிலாந்து மக்கள் மனங்களில்... 
முதன் பெண்மணியின் இதயத்தில்...
காயப்பட்ட இதயங்களை 
கண்ணீரால் கழுவும் - அந்த 
உயர்ந்த பெண்மணி
நியூசிலாந்தின் முதல் பெண்மணி 
ஜெசிந்தா ஆர்டெர்ன்
இஸ்லாமிய நெஞ்சங்களின் 
இதய சிம்மாசனத்தில் 
என்றும் வாழ்வார்!

ஈனச் செயல் புரிந்த 
அந்தக் கொடியவன் பெயரை
உச்சரிக்க மறுத்த
உன்னதமான பெண்மணி அவர் 

Welcome to Hell என
துப்பாக்கியில் எழுதி வந்த துஷ்டனே!
அல்லாஹ் அவர்களுக்கு 
சுவனத்தை எழுதி வைத்துள்ளான்...

இஸ்லாம் எனும் ஜோதியை துப்பாக்கியால் 
அணைக்க வந்த அறிவிலியே!
அணைக்கவில்லை – நீ 
மங்கிக் கொண்டிருந்த 
எங்கள் ஈமானிய பிரகாசத்தை 
தூண்டி விட்டிருக்கிறாய்!

துப்பாக்கியில் 
எமக்கு முடிவுரை 
எழுதி வந்த எதிரியே!
அது முடிவுரையல்ல...
சரிந்து போன 
உதுமானிய சாம்ராஜ்யத்தை
தூக்கி நிறுத்த – ஒரு 
முகவுரை எழுதியிருக்கிறாய்
உன் துப்பாக்கி உடலில் 

சிலுவை யுத்தத்தின் 
நிலுவையை 
நினைவூட்டியிருக்கிறாய்!...
குறித்துக் கொள்!
உதுமானிய ராஜ்யத்தில் 
எங்கள் கலிமா முழக்கம் - உன் 
காதுகளில் எட்டும் காலம் 
தூரத்திலில்லை...

2 comments:

Powered by Blogger.