ரணிலுக்கு பேரிடி, பல தரப்புகளும் கைவிடும் துர்ப்பாக்கியம்
ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பது தொடர்பில் அமெரிக்கா – இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக கொழும்பிலுள்ள உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என கட்சிக்குள்ளும் வெளியிலும் பரவலாக பேசப்பட்ட நிலையில் மீண்டும் ரணில் போட்டியிடத் தீர்மானித்து அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துள்ளார்.தேர்தல் முன்னேற்பாடு வேலைகள் அனைத்தும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் கீழ் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த விபரங்களை அறிந்த கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் குறிப்பாக இந்தியா அமெரிக்கா ஆகியவற்றின் இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டு அந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை மீண்டும் ரணில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் மேற்குலக நாடுகளின் ஆதரவு அவருக்கு கிடைக்காதென கருதப்படும் அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு ஆதரவு வழங்குவதை மீள்பரிசீலனை செய்வார்களென சொல்லப்படுகிறது.
-tamilan-
Post a Comment