"நான் இன்னும் வெற்றிபெறக்கூடிய, ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது குறித்து, இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில், பசில் ராஜபக்ஷ போட்டியிடப் போவதில்லை என்று கூறினார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (26) நடத்திய சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என தீர்மானிக்கவில்லை. பஷில் வருவார் என்றனர். கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என்றனர். சமல் ராஜபக்ஷ வருவார் என்றனர். குடும்பத்தில் ஒவ்வொருவர் தொடர்பிலும் மிகப் பெரிய கருத்துக்கள் பரப்பப்பட்டன. தான் போட்டியிடமாட்டேன் என பஷில் கூறிவிட்டார்” என்றார்.
"நான் இன்னும் வெற்றிபெறக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். எமது வேட்பாளர் யாரென்பதை, ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்துதான், எங்களுடை வேட்பாளரைத் தீர்மானிப்போம்” என, அவர் மேலும் கூறினார்.
உங்கள் குடும்பம் இல்லாமல் வேறு யாரையாவது போட்டியிடவைத்து பிழைப்பை பாருங்கள்.
ReplyDelete