மையித்து வீடொன்றிற்குச் சென்றிருந்தோம்....!
- பர்சானா றியாஸ் -
மையித்து வீடொன்றிற்குச் சென்றிருந்தோம். என்னுடன் வந்த பெண்ணுக்கு மையித்தைப் பார்த்ததும் ஓதும் துஆ மறந்துவிட்டதாகச் சொன்னார். பின்னர், வீட்டினுள்ளே இடம் போதாமையால், வாசல் பக்கமாக வந்து உட்கார்ந்தோம். மெதுவான முணுமுணுப்புடன் சிறு சிறு கூட்டங்களாகச் பலரும், போவோர் வருவோரை கண்காணித்துக் கொண்டு சிலருமாக உட்கார்ந்திருந்தார்கள்.
மையித்து வீட்டுக்கு வந்து உலக விடயங்கள் பேசுவதைத் தடுக்கமுடியுமாக இருந்தால், அதுவே மிகப் பெரிய விடயம். சில வீடுகளில் மையித்தைப் பார்த்ததும் ஓதும் துஆவை எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றேன். பாராட்டத்தக்க விடயம். அதேபோன்று, மையித்துக்காகவும், அவரது இழப்பில் கவலையுறும் உறவுகளுக்காகவும் கேட்கக்கூடிய துஆ மற்றும், மரணம் பற்றிய நபிமொழிகளையும் அதிகமாக எழுதி அந்த வீட்டின் சுற்றுப் புறங்களில் அனைவரின் கண்களிலும் படுமாறு வைத்துவிடுவது நல்லது எனத் தோன்றியது.
இந்த எண்ணத்தை எனது இரண்டாவது சகோதரரிடம் எத்திவைத்தேன். ஆம்! நல்ல விடயம். எதிர்காலத்தில் தானும் நண்பர்களும் சேர்ந்து, தேவையான துஆக்களைத் தொகுத்து பதாகைகளில் பொருத்தி கைவசம் வைத்துக் கொள்ளப் போவதாகவும், மையித்து வீடு என்று வரும்போது தாங்களே சென்று இதைச் செய்யலாம் எனக்கூறியது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அனைத்து மையித்து வீடுகளிலும் இது நடைபெற்றால் மையித்துக்கு அதுவே சிறப்பைப் பெற்றுத் தரத்தக்கதாக இருக்கும். அதே சிறப்பு, நாளை எமக்கும் கிடைக்க இறைவன் அருள்புரிவானாக!
Insha Allah...Good job.
ReplyDeleteIf the said dua is included in this article it would be perfect.
ReplyDeleteIt would help globally instead and furthermore of a certain place. More rewards can gain. Any way nice discussing.