ஜனாதிபதித் வேட்பாளராக, ரணில் போட்டியிடுவாரா..? திட்டமிடல் தலைவராக நெருங்கிய சகா நியமனம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என அலரி மாளிகையில் நடைபெற்ற விருந்தொன்றில் உத்தியோகபூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விருந்தின் போது ரணில் விக்ரமசிங்க சம்பந்தமாக விசேட விவரணப்படமும் திரையிடப்பட்டுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் தகுதியான மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என அந்த விவரணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனிடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டமிடல் தலைவராக ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Post a Comment