கோத்தபாயவிற்கு எதிராக புதிய, கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அல்லது வேறு கூட்டணி ஒன்றின் ஊடாக கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் அதனை எதிர்த்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு சந்திரிக்கா தீர்மானித்துள்ளார்.
கோத்தபாயவிற்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில் ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களுடன் சந்திரிக்கா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த கூட்டணி தொடர்பில் இரண்டு மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment