பெண்கள் நிர்வாணமாக அலையும் நாட்டில், என் மகனை வளர்க்க விருப்பமில்லை
தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் ஒரு நாடு, அங்கு என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை என ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அதிரடியாக அறிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்து, நாடு திரும்ப உதவுமாறு அயர்லாந்து பெண் ஒருவர் கெஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாணவியாக இருந்த Janai Safar (24) என்னும் இளம்பெண் இப்படி ஒரு அதிரடி அறிக்கை விடுத்துள்ளார்.
தனது உறவினரான பெண் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி சிரியாவுக்குச் சென்று அங்கு தீவிரவாதி ஒருவரை மணந்து கொண்ட Janai, வீடு திரும்ப வேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர்.
பத்திரிகையாளர் ஒருவர் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் இருக்கும் Janaiயை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெருக்களில் நிர்வாணமாக பெண்கள் அலையும் ஒரு நாட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்தது நான்தான்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சிரியாவுக்கு வந்ததிலோ, ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வாழ்வதிலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் Janai, தான் ஆயுதப் பயிற்சி பெறவோ, சண்டையிடவோ இல்லை என்றும், தனது ஜிகாதி கணவனுக்கு ஒரு மனைவியாக மட்டுமே இருந்ததாகவும், என்றாலும், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பினால் தான் சிறையில் அடைக்கப்படுவேன் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
நீ நாசமா போக தீவீர வாதியை மணந்த நீயும்் தீவீர வாதிதான்
ReplyDeleteMrs ISIS
ReplyDeleteதிருமதி பயங்கரவாதி
அப்படிப் பார்த்தால் மறுவாழ்வு நிலையங்களில் உள்ள LTTE இனரை என்னவென்று சொல்வது?
ReplyDeleteதீவிரவாதி முத்திரையில்லாத குத்தி சிரையில் அடைப்பதா?
அல்லது அவர்களுக்கும் திருந்தி வாழ சந்தர்ப்பம் அளிப்பதா?
ISIS not representing Islam or Muslims.it's a creation of America and Israel.isis damaging islam..so we don't need to support them.
ReplyDeleteI think she should have gone back to the country of origin than joining the US armed ISIS. As an Asian I admire Her concern for her son.
ReplyDelete