Header Ads



சுற்றுப்பிரயாணங்களும், அரபு மத்ரசாக்களும்...!!

- M. JAWFER -

கடந்த காலங்களை விட தற்காலத்தில் அரபிக் கலாசாலைகள் பல முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையை காணக்கூடியதாக உள்ளது வரவேற்கத்தக்கது.தற்போது அரபி கலாசாலை மாணவர்களும் சுற்றுப்பிரயாணம் செய்வதற்கான வழிகளை மதரசா நிருவாகம் மேற்கொண்டு வருகின்றது.கடந்த காலங்களில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இவ்வாறான விடயங்கள் காலம் கடந்து உணரப்பட்டுள்ளது.இதே போன்று இன்னும் பல விடயங்கள் நம்மிடம் இருந்து புறம்தள்ளப்பட வேண்டும் பல விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

மதரசா, பாடசாலை,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அவற்றுக்கான உடைகள் அந்தந்த முகாமைத்துவத்தால் நிர்ணயிக்கப்படுகிறது இதில் யாரும் மாற்றுக்கருத்து சொல்வதற்கு இல்லை.பாடசாலை மாணவரகள் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குரிய சீருடையை அணிந்து இருப்பது போல் பல்துறை சேர்ந்த ஊழியர்கள் அந்தந்த நிறுவனம் நிர்ணயித்த உடையை கடமை நேரத்தில் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.ஏனைய நேரங்களில் இவ்வாறான உடைகளை அணிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் இல்லை இவர்களும் அணிவதற்கு விரும்புவதும் இல்லை.

ஆனால் சில அரபி கலாசாலைகள் மதரசா  விடுமுறை காலங்களிலும் மதரசாவில் அணியும் சீருடைகளை அணிய வேண்டும் என்று நிபந்தனை இட்டு இருப்பது ஏற்றுக் கொள்ள  முடியாத ஒன்றாகவே உள்ளது.

ஒரு அரபிக் கலாசாலையில் இருந்து சுற்றுப்பிரயாணம் மேற்கொள்ளும் பல நூறு மாணவரகள் மதரசா சீருடையில் இலங்கையில் பல பாகங்களுக்கு செல்லும்போது பெரும்பான்மை இனவாதிகள் இம்மாணவர்களையும் இம்மத்ரசாக்களையும் மிகவும் சந்தேகக்கனுடன் பார்ப்பதும் இவர்கள் ஏதோ ஒரு அமைப்பாக செயற்பட்டு இலங்கைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்ற சந்தேகம் எழுகிறதும்.இதன் காரணமாகவே கடந்த காலங்களில் மதரசாக்கள் ஜிஹாத் என்னும் பயிற்ச்சிகளை கொடுக்கிறார்கள் பயங்கர வாதத்தை உருவாக்குகிறார்கள் என்றல்லாம் இன்று வரை பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதரசா தவிர்ந்த ஏனைய நேரங்களில் சாதாரண உடையில் மாணவரகள் நடமாடுவதை நாம் மேற்கொள்ளும் போது எங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் சந்தேகம் தானாக கழன்று விடும்.முஸ்லிம்கள் நன்றாக நாகரிகமாக உடை அணிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இவ்வாறான உடைதான் எப்போதும் அணிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சுற்றுப்பிரயாணம் செல்லும் போது சாதாரண உடை அணிந்து எந்தனை மாணவரகள் போனாலும் யாரும் கண்டு கொள்வதில்லை கவனித்து உற்று நோக்குவதும் இல்லை.மாறாக மதரசாவின் உடையுடன் அதிகமான மாணவர்களை காணும்போது அவர்கள் சந்தேகம் கொள்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

உதாரணமாக பெரும்பான்மை இனத்தின் மத குறு மாணவரகள் நூறு பேர் அவர்களின் மஞ்சள் உடையில் நமது ஊர்களில் சுற்றினால் நாம் எவ்வளவு சந்தேகப்படுகின்றோம் அச்சமடைகின்றோம் இவைகளை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டு.செயற்பட வேண்டும்.ஆகவே மதரசா நிருவாகம் பாட நேரங்களில் அணிய வேண்டிய மதரசா சீருடைகளை சுற்றுப்பிரயானத்திலும் ஏனைய வெளி நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இது நமது சமுகத்தின் மீது பெரும்பான்மை இனவாதிகள் வைத்திருக்கும் சந்தேகத்தை இல்லாமல் செய்வதற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.அல்லாஹ்வே நன்கறிந்தவன். 

6 comments:

  1. பாடசாலை மாணவ மாணவியரும் அவர்கள் சீருடை அணிந்துதானே சுற்றுலா செல்கின்றனர்

    பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் கறுப்பு பேண்டும் வெள்ளை ஷேர்ட்டும் அணிந்து சுற்றுலா செல்வதை கண்களால் கண்டுள்ளேன்.

    குடும்ப சுற்றுலா இன்றி மாணவர்கள் சுற்றுலா என்றால் சீருடை அணிந்துதானே செல்வார்கள் இது எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை தானே .

    கட்டுரையாளர் சடவாத சந்தர்ப்பவாத கைக்கூலி முஸ்லிம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. இங்கு எழுதும் ஒருவர் அவருடைய கருத்தை நியாயப்படுத்தி முன்வைத்தார், நாட்டின் நிலைமையில் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஒன்று சமூகத்தில் பொதுவாக அனைவரும் அணியும் சாரமும் சேர்ட்டும் அல்லது சாரமும் களுசனும் என்ற உடுப்புகள் தான் சாதாரணமாக முஸ்லிம்கள் அணியும் உடை.அது தவிர்தது கடந்த 30 -40 வருடங்களாக சில இயக்கங்களின் செயல்பாடுகளில் மூழ்கி அவற்றின் கொள்கைகளை அவர்களின் வாழ்க்கையுடன் இறுகப்பிணைத்து அந்த இயக்கங்கள் ஆரம்பித்த நாடுகளில் வாழும் மக்களின் ஆடைகளையும் அப்படியே இவர்களு்ம் அணிந்து கொண்டு அதற்கு இஸ்லாமிய ஷரிஆப் பெயரும் சூட்டி தாடியும் ஜுப்பாவும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடை என சமூகத்தில் ஏற்றுக் கொள்ள வைத்துள்ளார்கள். வடஇந்தியா ,மகாராஷ்ரா, ஹைதராபாத் பகுதியில் வாழும் இந்துக்களும் இந்த ஜுப்பாவைத்தான் அணிகின்றார்கள் என்ற உண்மைணை ஏனே இலங்கையிலுள்ள இயக்கவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. மேலே உள்ள கருத்தை எழுதியவர் கட்டுரையாளரை சடவாத சந்தர்ப்பவாத கைக்கூலி எனக்கூறுவதுதான் இனவாதத்தின் சரியான பிரதிபலிப்பு எனவும் யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் விதண்டாவாதம் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. உண்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் தற்காலத்தில் நாம் நடந்து கொள்ளும் விடயங்களையும் நமது தரப்பால் கசிந்து புகைந்து தீயாக மாறும் இனவாத செயலை சிந்தனை செய்யும் எவரும் நான் எழுதிய கட்டுரையை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை,இனவாதம் எங்கிருந்து எதனால் ஏற்படுகிறது எதற்காக ஏற்படுகிறது என்பது நாமும் நடு நிலையாக சிந்திக்க வேண்டும் .மேலே ஒரு சகோதரர் இந்தியாவில் சில மாநிலங்களில் அணியும் ஜுப்பா உடை பற்றி எழுதிய விளக்கம் வரவேற்க தக்கவாறு இருக்கிறது,அந்த ஜுப்பா அணியும் நபர்கள் பொதுவாக முஸ்லீம்களும் இல்லை இது அவர்களின் பழக்கப்பட்ட பாரம்பரிய உடை அல்லாமல் இந்துக்களின் மத ரீதியான உடை இல்லை,நாமாகவே உட் புகுத்திய சில கலாசார நிகழ்வுகள் நமக்கே கேடாக வரும்போது அதனை விட்டுத் தள்ளுவதில் நமது இஸ்லாமிய அடிப்படை அகீதாவில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
    பொதுவாக குர்ஆன் சுன்னாவை உரிய முறையில் பின்பற்றப்படும் எந்த கலாச்சார விடயத்திலும் முஸ்லிம்கள் அதிகமாக இனவாதிகளின் எதிர்ப்பை சந்திக்கவில்லை,குர்ஆன் ஹதிஸுக்கு அப்பால் உள்ளதை நாம் கடைப்பிடிக்கும்போதுதான் எதிர்ப்பாளர்கள் அத்தோடு சேர்த்து இஸ்லாமிய வரையறைக்குள் உள்ளதையும் சேர்த்து இரண்டறக் கலந்து எதிர்ப்பை காட்ட ஆரம்பிக்கிறார்கள் இது யாரால் ஏற்பட்ட வினை? நாமே தேடியது.ஈமானும் அஹ்லாக்கும்வாணக்க வழிபாடுகளும் இஸ்லாமிய அடிப்படையில் குறிப்பிட்ட உடையை கொண்டது இல்லை என்பது ஆணித்தரமான உண்மை என்பதை உணர்ந்து இருக்கும் நாம் ஏன் வறட்டுகௌரவம் பார்த்து மற்றவர்களின் வெறுப்பை தேட வேண்டும்.இவ்வாறு நாம் அடம் பிடிப்பது இன்னும் நாம் உண்மையான இஸ்லாத்தை படிக்கவில் என்பதுதான் அர்த்தம்,

    ReplyDelete
  4. Very Worth and True article we all have to follow it....
    Now we started to forget our own SriLankan Muslims culture and trying to follow Pakistan and Arabs culture... One day we will loss our SriLanka address by following them...

    ReplyDelete
  5. 1970 பதுகளின் பிற்பகுதியில் ”இலங்கை முஸ்லிம்கள் அரபிய மயமாதல்” சரி தவறு என ஆரம்பித்த விவாதம் இன்ன்னும் முடிவுக்கு வரவில்லை. அன்றில் இருந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தரப்பு கருத்துக்களை கேட்டு வருகிறேன். ஆனால் ஒருபோதும் இந்த விவாதம் எந்த ஒரு தரப்பிலும் உள்நோக்கமற்ற ஜனநாயக தேடலாக இருந்ததில்லை என்பதுதான் சோகம்.

    ReplyDelete

Powered by Blogger.