Header Ads



நியுசிலாந்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இன்றும் பல நிகழ்வுகள் - தற்கொலை செய்த துப்பாக்கிதாரி யார்..?


- Sharthaar -

இன்று -29- பயங்கரவாத தாக்குதல் நடந்து இரண்டாவது வாரம்... 

தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினவாக இன்று கிரைஸ்ட்சேர்ச்சிலும், ஓக்லண்டிலும் விஷேட ஜும்மா தொழுகையும் அதை தொடர்ந்து பல விஷேட  நிகழ்வுகளும் ஏற்பாடாகி உள்ளன.

ஐக்கிய ராச்சியத்தின் புகழ் பெற்ற பாடகர் யூசுப் இஸ்லாம் ( கட் ஸ்டீவன்) அவர்களின் இசை நிகழ்ச்சி, இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நிகழ்வு. கிரைஸ்ட்சேர்ச்சில் நடைபெறும் இந்த இசை நிலழ்ச்சி நேரடியாக ஓக்லண்டிலுள்ள ஈடன் பார்க்ப்மைதானத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. 

கிரைஸ்ட்சேர்ச்சிலும், ஆக்லண்டிண்டிலும் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களும், அரசுடன் இணைந்து இன்று ஹேக்லி பூங்காவிலும், ஈடன் பார்க்கிலும் ஜும்மா தொழ வரும்படி தத்தமது பிரதேச மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதோடு, வாகன நெரிசலை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்படாத போதும், பாதுகாப்பு உச்ச பட்சமாக இருக்கும் என்றும், வருகைதரும் மக்கள் அதற்காக பாதுகாப்பு தரப்புடன் ஒத்துழைக்கும் படியும். சந்தேகமான ஏதும் நடவடிக்கைகளை கண்டால் உடனே பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்குமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றன் போது ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு துப்பாக்கி பயிற்சி பெற்ற ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். அவனுக்கும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவனுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத போதும், பொலிஸார் நடந்த தாக்குதலை தொடத்ந்து புலனாய்வு நடவடிக்கைகளை உச்சபட்ச உத்வேகத்துடன் நடத்திவருவது தெரிகிறது.

No comments

Powered by Blogger.