பறிக்கப்பட்ட எனது, வரப் பிரசாதங்களை மீண்டும் தாருங்கள் - பொன்சேகா கோரிக்கை
பறிக்கப்பட்ட எனது வரப் பிரசாதங்கள் அனைத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பீல் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான முறையில் பழிவாங்கப்பட்ட எனக்கு, பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதம், சம்பளம், கொடுப்பனவுகள், உறுப்பினர் ஓய்வூதியம், வாகன அனுமதிப்பத்திரம் என அனைத்தும் மீண்டும் வழங்கப்படாமை எனது பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை மீறும் செயலாகும்.
அதனால் இதுதொடர்பாக ஆராய்ந்து பார்த்து எனக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விசேட கூற்றொன்றை முன்வைத்து சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வறு குறிப்பிட்டார்.
கார் பெர்மிட், அமைச்சுக்கு கட்டடம் வாடகை்கு எடுத்து அடித்த கொமிஷன் மற்றும் கிடைத்த கதமனாக்கள் அனைத்தும் பல கோடிகளைத் தாண்டும். அதை எடுத்துக்கொண்டு பென்ஷன் வயதில் அமைதியாக அமெரிக்காவும் விஷா மறுத்தமையால் அமைதியாக வீட்டுப்பக்கம் சாய்ந்து கொண்டு இருக்கலாமே! வாலிப மக்கள்,நாடு பற்றிய உண்மையான கரிசனை உள்ளவர்கள் ஆட்சியை நடாத்தட்டும்.
ReplyDelete