Header Ads



ஒளிந்திருந்தே மகிந்த தரப்பு தாக்குதல், தோற்கடித்துக் காட்டுமாறு முஜிபூர் ரஹ்மான் சவால்

முடியுமானால் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பை தோற்கடித்துக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மகிந்த அணியினருக்க சவால் விடுத்துள்ளார்.

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

இது நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியாகும் என்றும், இவ்விரு அமைச்சர்களும் பதவி துறக்கவேண்டும் என்றும் மகிந்த அணி வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”குழுநிலை விவாதத்தின்போது பொதுவாக வாக்கெடுப்பு கோரப்படுவதில்லை. எனவே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாலைநேரத்தில் சபையில் இருக்கவில்லை. இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி – ஒளிந்திருந்தே மகிந்த தரப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.

அப்படியே அவர்களுக்குப் பலம் – துணிவு இருப்பின் எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறும் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பை தோற்கடித்துக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.