அலரி மாளிகை இரவு விருந்தில், கலந்துகொண்டு மகிழ்ந்த தமிழ் கூட்டமைப்பு
வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை வர அனுமதியளிக்காமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியென தெரிவித்த பிரதமர் ரணிலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க, நேற்று அலரி மாளிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சென்றதாக தெரிகிறது.
மாவை சேனாதிராஜா எம் பி தலைமையில் கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகிய எம் பிக்களே பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதமருக்கு ஆரத்தழுவி வாழ்த்தினை தெரிவித்த இந்த எம் பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இணங்கிச் செயற்படுவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்.
தேசிய அரசொன்று அமையவுள்ளதாகவும் ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து அந்த அரசை அமைக்க ரணில் முயற்சி செய்வதாகவும் செய்திகள் கசிந்துள்ள நிலையில் கூட்டமைப்பு இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் கீழ் நடந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தான விசேட காணொளி ஒன்று நேற்றைய பிறந்த நாள் நிகழ்வில் திரையிடப்பட்டது .
அதனை பார்த்து ரசித்த எம் பிக்கள் அதற்காக பிரதமருக்கு வாழ்த்தினை தெரிவித்ததுடன் அலரி மாளிகை இரவு விருந்தில் கலந்து மகிழ்ந்ததாகவும் அறியமுடிந்தது.
T-N
So.what..?
ReplyDeleteரணில் ஒரு சிங்கள கட்சியின் தலைவர், வேறு எப்படி சொல்ல முடியும்?, TNA யின் கொள்கை அதற்கு மாறானது.
அரசியல் கொள்கைகள் வேறு, தனிப்பட்ட பிறந்த நாள் நிகழ்வு (private function) வேறு.
வெளியில தேசியம் வெங்காயம் எண்டு பேச வேண்டியது உள்ளுக்குள் குடித்து கும்மாளம் அடிக்க வேண்டியது. இன்னும் இரண்டு கார்கள் வீதம் கொடுத்தால் அடுத்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு
ReplyDeleteஅரசியலில் யாரும் நண்பரும் இல்ல எதிரியும் இல்ல.
ReplyDeleteஇதைவிட அமைச்சர் ரவூப் பக்கீம் மகிந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடியதை என்ன சொல்ல... கக்