பொலன்னறுவையின் முதலாவது விஷேட முஸ்லிம் வைத்திய நிபுணராக Dr முஹம்மட் முஸ்தபா அஹ்லம் தெரிவு
பொலன்னறுவை மாவட்டத்தில் முதலாவது விஷேட முஸ்லிம் வைத்திய நிபுணராக Dr முஹம்மட் முஸ்தபா அஹ்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளாரகள்.
மாணிக்கம்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட Dr முஹம்மட் முஸ்தபா அஹ்லம் அவர்கள் நேற்று -26- வெளியாகிய பெறுபேற்றின்படி விஷேட வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
இவரே பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது விஷேட முஸ்லிம் வைத்திய நிபுணர் ஆவார்.
மேலும் இவர் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அல்மனார் வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இவர் மேலும் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
தகவல் - பாத்திமா ஷிரோமி
ஆசிரியை
பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி
Post a Comment