எனக்கு சொந்தமான காணியை, மஹிந்த ராஜபக்ச பறித்தெடுத்துவிட்டார் - சந்திரிக்கா
திருகோணமலை, தலப்பையாறு பகுதியில் இருந்த தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை மஹிந்த ராஜபக்ச பறித்தெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா திருகோணமலைக்கு இன்று -27- விஜயம் செய்து அம்மக்களிடம் அபிவிருத்தி திட்டங்களை கையளித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குச்சவெளி, சலப்பையாறு பகுதியில் மூன்று கிணறுகளையும், 22 மீனவக் குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உள்ளக வீதிகளையும் அவர் இதன்போது கையளித்து வைத்துள்ளார்.
மொரவெவ மற்றும் கோமரங்கடவல போன்ற பிரதேச செயலகங்களில் கிணறுகள், வீதிகள் மற்றும் குளங்களை புனரமைப்பு செய்வதற்காகவும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் இதன்போது வழங்கியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் 1500 குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். மணிவண்ணன், குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஏ. முபாரக் மற்றும் அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment