நாயை நம்பலாம், சுதந்திரக் கட்சியை நம்பமுடியாது - மைத்திரியின் கோட்டையில் நின்றபடி தாக்குதல்
வீட்டில் இருக்கும் நாயை நம்பும் அளவுக்கு கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்ப முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை (மைத்திரியின் கோட்டை) பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியினர் 50 வீதத்திற்கு மேற்பட்ட மக்களின் விருப்பத்தை வென்றெடுத்துள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோரில் யாரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினாலும் 60 சத வீதமான பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெறக் கூடிய வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Mmmmm.....raajapaksayarhala thawira naattula aalawathakku yaarume illapola....
ReplyDelete