வேஷ்டி, பனியன் அணிபவரே ஜனாதிபதி வேட்பாளர் - குமார வெல்கம
வேஷ்டி - பனியன் அணியும் ஒருவரே நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதுவரை நான் கூறியது அனைத்தும் நடந்துள்ளது. நான் மனச்சாட்சிக்கு இணங்க பேசும் நபர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெல்கம, வேஷ்டி, பனியன் அணியும் நபரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்.
நாட்டை ஆட்சி செய்யும் நபர் ஜனநாயக தலைவராக இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட போகும் வேட்பாளர் யார் என்பதை அடுத்த மே மாதத்திற்கு பின்னர் தகவல்களை வெளியிடுவதாகவும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment