Header Ads



சிறுபான்மை சமூகங்களுக்கு ஊடகவியலைவிட, வேறுஒரு சிறந்த ஆயுதம் இருக்கமுடியாது - பேராசிரியர் அனஸ்

இன்று நாம் கறுப்பு ஊடகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நவீன ஊடகவியல் என்பது பாரம் பரிய ஊடகவியலில் இருந்து வேறு படுகிறது. ஆரம்பகால ஊடகவியல் இன்று திசை மாறிவிட்டது என ஓய்வு நிலைப் பேராசிரியரும் சமூக ஆய்வாளருமான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் தெரிவித்தார். 

கண்டி மகாவலிரீச் ஹோட்டலில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்ஞம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அக்குறணை 'நியூஸ்விவ்' நிறுவனத்தினால் நடத்தப்பட்ட  ஆறுமாத கால ஊடகப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வான இது இடம் பெற்றது.  'மத்திய இலங்கையின் தமிழ் ஊடகத்துறையை வலுப்படுத்தல்' என்ற இலட்சியத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

புத்தளம் மன்னார் மாவட்டங்களை அண்மித்த சில செய்திகள் இப்போது ஊடகப் பசிக்கு தீனி போட்டு வருகின்றன. ஆனால் ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்பது அனேகர் அறியாத விடயமாகும். அருவக்காடு பிரச்சினையை எடுத்துக்கொண்டால் அங்கு உண்மை மறைக்கப்படுகிறது. செய்திகள் திரிபு படுத்தப்படுகின்றன. உண்மையில் புத்தளம் மாவட்டத்து மக்களை எடுத்துக்கொண்டால் முதலாவது சவாலாக சீமந்து தொழிற்காலையிலிருந்து வெளியாகும் தூசுக்கழிவுகள் சுற்றாடலுக்கு வந்து மக்களைப்பாதிக்கிறது. அடுத்தபடியாக அதிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காற்று மாசடைந்து வருகிறது. அதற்கு மத்தியில் அழகிய சுற்றாடலைக் கொண்ட அருவக்காடு பகுதியில் முழுநாட்டிலும் உள்ள திண்மக் கழிவுகளை கொண்டு வந்து குவிக்கும் வேலைத்திட்டத்து மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள். அவர்களது அவலத்தை வந்து பார்த்வர்களுக்குத் தெரியும். சுவாசிக்க சுத்தமான காற்று இன்றி சுவாச நோய்கள் உற்பட பல்வேறு நோய்களுக்கும் உபாதைகளுக்கும் உற்பட்ட அவர்களது கதையை எந்த ஊடகவியலாளரும் பெரிது படுத்தியதாகத் தெரிய வில்லை. உண்மை மறைக்கப்படுவதையே காண முடிகிறது.

ஆனால் பாராளுமன்றில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன வெளிப்படுத்திய விடயம் அனைவராலும் வரவேற்பட வேண்டியவை. ஒன்று பால்மா என்ற பெயரில் நாம் அருந்தும் ஒருவகை இரசாயனச் சேர்க்கை அல்லது கலவை பற்றியது. இது போன்று சரியான புலனாய்வு ரீதியாக பயன் தரக் கூடிய விடயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஊடக வியலாளர்கள் வெளிக்கொணர வேண்டும்.

இன்று கறுப்பு ஊடக ஆக்கரமிப்பு மிகைத்து விட்டது. நாம் ஒரு சில கறுப்பு ஊடகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஊடகங்கள் எதனையும் திரிவு படுத்த முடியாது. ஆனால் திரிவு படுத்தப்பட்ட ஊடகங்கள் அதிகமாக இன்று ஆக்கரமிப்புச் செய்து வருகின்றன. 

கடந்த சுனாமி காலத்தில் சீனிகம என்ற இடத்தில் நண்பிகள் பலர் கைகோர்த் வண்ணம் நிரில் தென்னை மர உயரத்திற்கு மிதந்து வெளியான காட்சியும் அதனை ஈடுகொடுக்க முடியாது அவர்கள் கைகளை விட்டுப் பிரிந்து மரணித்த காட்சி உற்பட பல காட்சிகள் இலங்கையின் பால் முழு உலகையும் ஈர்க்கவைத்தது. வரலாற்றில் என்றுமில்லாத உதவி இலங்கைக்குக் கிடைக்க இவ்வாறான ஊடகங்கள் பங்களிப்புச் செய்த நல்ல விடயங்களும் இல்லாமல் இல்லை.

வாழ்வின் அடிப்படை ஊடகவியல் தங்கியுள்ளது. நல்லது கெட்டது, குறை நிறை என அனைத்தையும் எடுத்துக்காட்ட முடியும். சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரை ஊடகவியலை விட வேறு ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியாது என்றார்.

JM.HAFEEZ-

2 comments:

  1. Sorry for the title..

    MAKING DUA is the best and 1st weapon for TRUE MUSLIMS in SRilanka.. But not the media.

    ReplyDelete
  2. தோழர் அனஸ் அவர்களின் கருத்துக்களை வழி மொழிகிறேன். இன்று ஊடகவியல் துறையில் முன்னணி ஊடகவியலாளர்கள் முன்னணி பாத்திரம் வகிக்கிறார்கள். அவர்களுள் பலர் பன்மொழி ஆற்றலுள்ள ஊடகவியலாளர்கள். பிரச்சினை அதுவல்ல. பிரச்சினை இலங்கை வர்தக மூலதனத்தில் கணிசமான பகுதியை வைத்திருக்கும் முஸ்லிம் முதளாளிகள் எவரும் பொதுநல நோக்கோடு உடக துறையில் முதலீடு செய்ய முன்வருவதில்லை என்பதாகும். இந்த இழிநிலையை மாற்ற முஸ்லிம் பணக்காரர்கள் இனியாவது முன்வரவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.