யானைக்குள் வெடித்தது சர்ச்சை, மும்முனைப்போட்டி ஆரம்பம் - சஜித் மீது ரணில் அதிருப்தி
-TN-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவது என்ற விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப் போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் அதற்கான பிரசாரச் செயற்பாடுகளை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளார். ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம,சாகல ரத்நாயக்க,சரத் பொன்சேகா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதில் நவீன் திசாநாயக்க,சம்பிக்க ரணவக்க உட்பட்ட பலர் நகர்வுகளை கொண்டு வருகின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய முகம் ஒன்றை இறக்கினால் வெற்றி பெற முடியும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.அதேசமயம் கடந்த கால அரசியல் நெருக்கடியில் மிகவும் பொறுமையாக – சாதுர்யமாக செயற்பட்டதால் உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கருவுக்கு இருப்பதாக கருதப்படுவதால் அதனை வைத்து கருவை எழுச்சி பெறச் செய்யலாமென்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.
ரணில் அதிருப்தியில் !
இதற்கிடையில் சஜித் பிரேமதாசாவுக்கு ”சாசன தீபன அபிமானி ஸ்ரீ லங்கா ஜனரஞ்சன ” விருதை மல்வத்து மாநாயக்க பீடம் வழங்கவுள்ள நிகழ்வு வரும் 31 ஆம் திகதி மல்வத்து மகா விகாரையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரியை பிரதம அதிதியாக சஜித் அழைத்துள்ளமை ரணிலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் ஆளுங்கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் இதற்கு அழைத்துள்ளதால் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாராகியே சஜித் இதனை செய்வதாகக் கருதுகிறார் ரணில்.முன்னதாக கடந்த வாரம் இப்படியான விருதை சபாநாயகர் கரு ஜயசூரிய கண்டியில் பெற்றிருந்த போதும் இப்படியான நிகழ்வுகள் எதனையும் அவர் செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கத
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள இந்த மும்முனைப் போட்டியால் உட்கட்சி கோஷ்டிகளும் உருவாக ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Post a Comment