Header Ads



நியூஸிலாந்து பயங்கரவாதியை, அவ்வளவு இலகுவாக சாக விடலாமா..? பள்ளிவாசலில் இலங்கை சகோதரியின் உரை

கிரிஸ்டசர்ச் பள்ளிவாசல் படுகொலைத் தாக்குதலுக்கு காரணமானவை தூக்கிலிட வேண்டாம் என்று நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆக்லாண்ட் நகரபிதா , மத நல்லிணக்க தலைவர்கள் மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை 22.03.2019 மார்ச் நான் ஆற்றிய உரை .

தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்ற மனுவில் நானும் கையெழுத்திட்டேன் . அப்போது ஆத்திரம் என்னை கண்ணை மறைத்து விட்டது .

பிறகு யோசித்துப் பார்த்தேன். அவனை அவ்வளவு இலகுவாக சாக விடலாமா? எங்கள் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் ஒரு உயிரைப் பலி கொடுப்பதோடு முடிந்துவிட வேண்டுமா ?

இல்லை , அவன் நீண்டகாலம் வாழ வேண்டும் ; தனிமைச் சிறையில் தன் ஈனச் செயலை எண்ணி வருந்த வேண்டும் ; குர் ஆனை வாசிக்க வேண்டும் ; எங்கள் இறுதி நபியின் வரலாற்றைப் படிக்க வேண்டும் ; ஒரு நாள் இதே கிரிஸ்டசர்ச் பள்ளிவாசலுக்கு அவன் திரும்பி வரவேண்டும். துப்பாக்கிகளோடும் , குண்டுகளோடும் அல்ல. தோளோடு தோள் சேர்ந்து எங்கள் சகோதரர்களுடன் அவன் வந்து தொழவேண்டும் . இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம் என்ற செய்தியை அவனாகவே இந்த உலகுக்கு உணர்த்த வேண்டும் .

அவனுக்கு தண்டனை வேண்டும் என்பதைவிட, அவனில் மாற்றம் உருவாக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

-மரீனா இல்யாஸ் ஷாபீ -


1 comment:

  1. Let them murder in jail.We never want to see his face anymore.

    ReplyDelete

Powered by Blogger.