நியூஸிலாந்து பயங்கரவாதி பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன், ஆஸ்திரிய தீவிரவாதிக்கு அனுப்பிய பணம்
- Kalai Marx -
ஆஸ்திரியாவில் வலதுசாரி பயங்கரவாத இயக்க சந்தேகத்தின் பேரில், தீவிர தேசியவாத IBO கட்சித் தலைவரின் வீட்டில் பொலிஸ் சோதனையிட்டுள்ளது. நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த சோதனை இடம்பெற்றது.
ஆஸ்திரிய காவல்துறை இது தொடர்பாக மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்து விட்டது. கணனி மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
நியூசிலாந்து தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், படுகொலைக்கு காரணமான பயங்கரவாதி IBO வங்கிக் கணக்கில் "பெருந் தொகை" நன்கொடை செலுத்தி இருக்கிறான். அதனை உறுதிப் படுத்தியுள்ள IBO தலைவர் செல்னெர், அந்தப் பணத்தை "நற்காரியங்களுக்கு" செலவிடவுள்ளதாகவும், தனக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
(படத்தில்: நடந்த சோதனை தொடர்பாக IBO தலைவரின் டிவிட்டர் பதிவு.)
Post a Comment