முன்பு செய்த பாவங்களே, மின் தடைக்கு காரணம் - ரவி
மின் விநியோகத் தடைக்கு காரணம் முன்பு செய்த பாவங்களேயென, மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இன்று -26- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரையாற்றுகையில், 2014ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மின்சார உற்பத்தி துறை அபிவிருத்தி செய்யப்படவில்லையெனவும், இதன் காரணமாக தற்பொழுது மின் துண்டிப்பின் கால அவகாசம் 4 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த 4 மணித்தியால மின் துண்டிப்பின் காரணமாக பொது மக்கள் அதிக சிரமங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், வர்த்தகத்துறை அதிகளவில் பாதிக்கப்படைந்துள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
அத்தோடு பிரதானமாக குளிரூட்டியை மய்யமாக வைத்து வர்த்தகத்தில் ஈடுபடும், வர்த்தக நிலையங்களில் குளிரூட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருள்களில் பலவற்றை வெளியேற்றி வரும் நிலையை தற்பொழுது அவதானிக்க முடிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மே மாத இறுதிக்குள் போதியளவு மழை பெய்யாதுவிடின், மின் துண்டிப்பின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுமென்றும் கூறினார்.
அது சரி,
ReplyDeleteஅடுத்த அரசாங்கத்திலும் மின் துண்டிக்கப்பட்டால் இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் காரணமாக இருக்கலாம்.