கஞ்சிபான நாடு கடத்தப்பட்டவிதம் பிழையானதா..? மதுஷ் தப்பிச் செல்வானா...?
கஞ்சிபானி இம்ரான் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட விதம் பிழையானது என தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக நபர் ஒருவரை நாடு கடத்தும் போது பின்பற்றப்படும் அணுகுமுறைகளை டுபாய் அரசாங்கம் பின்பற்றத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட நான்கு பேர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் மாலைதீவு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட நபர் பற்றிய விபரங்கள் குறித்த நபர் பயணம் செய்யும் விமானத்தின் விமானியின் ஊடாக நாடு கடத்தப்படும் நாட்டின் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதே பொதுவான மரபாகும்.
பிரபல பாடகர் நதீமால் பெரேராவும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் நாடு கடத்தப்பட்ட போது இந்த மரபு பின்பற்றப்பட்டிருந்தது.
எனினும், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்ட போது இந்த மரபு பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் காரணமாக கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவிதமாக பாதாள உலகக்குழுத் தலைவரான மாகந்துரே மதுஷ் நாடு கடத்தப்பட்டால் அவர் இலகுவில் வேறும் ஓர் நாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடிய சாத்தியம் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் நாடு கடத்தப்படும் அவர்களை கைது செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
Post a Comment