Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை அமைத்துவிட்டு, தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்கிறார்கள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை அமைத்துவிட்டு பார்வையாளராக இருக்காமல் தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்வது போன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழங்களுக்கும், உடல் வலுவூட்டும் நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் மற்றைய சமூகத்தின் அரசியல்வாதிகளை குறைகூறுவதை விடுத்து நாங்கள் சரியான வழிகளை தேர்ந்தெடுத்து சரியான முறையில் பயணிக்கவேண்டும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு விளையாட்டு கழகங்களுக்கு சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான உடல் வலுவூட்டும் நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினரின் விசேட கோரிக்கைக்கு அமைய கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதியில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடல் வலுவூட்டல் நிலையத்திற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. சுமார் 20இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.

1 comment:

  1. If you keep blaming others it won't help you or your community, there is a lot you can do for your community, take a look at the 85,000 war widows in the North & East, there is a lot you can do if you really want to do, it is never too late. Don't curse the darkness light a candle.

    ReplyDelete

Powered by Blogger.