முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மாதிரி, எளிமையான தலைவரை உலகத்தில் நான் பார்த்து கிடையாது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாதிரி எளிமையான தலைவரை உலகத்தில் நான் பார்த்து கிடையாது அவரது எளிமை பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது இலங்கை ராஜாங்க அமைச்சர் செய்யது அலி சாஹிர் மௌலானா பெருமிதம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாதிரி எளிமையான தலைவரை உலகத்தில் நான் பார்த்து கிடையாது. அவரது எளிமை பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடம்
இலங்கை ராஜாங்க அமைச்சர் செய்யது அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம் ஏ.எம். நிஜாம், மற்றும் மாநில மகளிர் லீக்கின் பொருளாளர் ஷாஸ்மினாஸ் , திருச்சி மணிச்சுடர் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை விஜயம் செய்தார்கள்.
இலங்கையில் உள்ள சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் செய்யது அலி சாஹிர் மௌலானா அலுவலகத்தில் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி களப்பணி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் பற்றி இலங்கைக்கு விஜயம் செய்த திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம். நிஜாமிடம் இலங்கை ராஜாங்க அமைச்சர் செய்யது அலி சாஹிர் மௌலானா நிலவரங்களை கேட்டறிந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இறைவனிடம் து ஆ செய்வதாகவும் கூறினார்.
பின்னர் ராஜாங்க அமைச்சர் இந்தியாவில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாதிரி எளிமையான தலைவரை உலகத்தில் நான் பார்த்து கிடையாது. அவரது எளிமை பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அவரிடம் பேசும்போது எனக்கு பல உணர்வுகளை துண்டியது இப்படிப்பட்ட தலைவர் இந்தியாவிற்கு கிடைத்நுச இருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்க்கு பெரிய பொக்கிஷம் தான் நாம் நினைக்க வேண்டும். பேராசிரியர் அவர்கள் பார்த்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் . நானும் இந்தியாவுக்கு வந்தால் சந்தித்து அவரிடம் பல மணி நேரம் பேசினால் தான் எனக்கு திருபஞ அடையும். தலைவர் மேலும் உடல் நலத்துடன் வாழ்வதற்கு நி தொடர்ந்து து. ஆ செய்து கொண்டிருக்கிறேன் என்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிளிடம் இதை தெரிவித்தார்.
Post a Comment