Header Ads



பாலியல் லஞ்சம் பற்றி ஜனாதிபதி அதிரடி - ஆடிப்போன பிரதமரும், அமைச்சர்களும் - வெளியில் சொன்னால் வெட்கம் எனவும் தெரிவிப்பு

” நாட்டில் நடக்கும் இந்த மின்வெட்டுக்கு காரணமாக இருக்கும் அரச அதிகாரிகள் லஞ்சம் ஊழலுக்கு பேர்போனவர்கள். வெளிநாடுகளுக்கு சென்ற அவர்களுக்கு பெண்களை கொடுத்து பாலியல் லஞ்சம் கூட வழங்கப்பட்டுள்ளது.தேவையானால் சி.ஐ.டியிடம் முறையிட்டு விசாரிக்க சொல்லுங்கள்.நான் ஆதாரங்களை தருகிறேன். எந்த நாட்டுக்கு அவர்கள் போனார்கள் என்னென்னவெல்லாம் அனுபவித்தார்கள் என்பது தெரியவரும். இந்த நிலைமைக்கு பிரதமரும் ஒரு காரணம். நான் பதவி விலக்கிய அதிகாரிகளை அவர் மீண்டும் வேலைக்கு சேர்த்தார்..”

இப்படி நேற்று -26- நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரையும் அமைச்சர்களையும் வாட்டியெடுத்திருக்கிறார் மைத்ரி. நாட்டில் தற்போது நடக்கும் மின்வெட்டு குறித்து பேச்சு வந்தபோது இப்படிக் கருத்து வெளியிட்டுள்ள மைத்ரி அங்கு மேலும் கூறியுள்ளதாவது ,

பொதுவசதிகள் ஆணைக்குழு இந்த பிரச்சினைக்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் .ஆணைக்குழுவின் வின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் இதற்கு பதில் கூற வேண்டும்.அவர்களின் முழு விபரங்களும் என்னிடம் உள்ளன. புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் மின்தட்டுப்பாடு ஒன்று வரும்போது அதை தீவிரமடையச் செய்து பின்னர் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தான் அவர்களின் நோக்கம். அதற்காக மின் அலகு ஒன்றுக்கு தரகுப்பணம் கிடைக்கிறது.அந்த விபரம் எல்லாம் என் கையில் இருக்கிறது.

அது மட்டுமல்ல அவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா இலவசமாக கிடைக்கிறது.அப்படி போகும் இடங்களில் பெண்களை இவர்கள் பாலியல் லஞ்சமாக பெற்ற நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. சி ஐ டியிடம் வேண்டுமானால் கூறி விசாரணை செய்யச் சொல்லுங்கள். நான் ஆதாரத்தை தருகிறேன்.அவர்களின் பாஸ்போர்ட் இலக்கங்களை வைத்து சோதனையிட்டால் எந்தெந்த நாடுகளுக்கு எப்போதெல்லாம் சென்றுவந்துள்ளார்கள் என்பது தெரியும்.அப்போது நான் சொன்னவற்றில் உண்மை புரியும். இவற்றையெல்லாம் வெளியில் சொன்னால் அரசுக்கே வெட்கம்.இவை சொல்லக் கூடியய கதைகளும் அல்ல.

இந்த நிலைமைக்கு பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். பொது வசதிகள் ஆணைக்குழுவின் ஒரு அதிகாரியை நான் மோசடி காரணாமாக விலக்கி வைத்திருந்தேன்.ஆனால் பிரதமர் அவரை தனது ஆலோசகராக பதவியை வழங்கி பின்னர் பொதுவசதிகள் ஆணைக்குழுவுக்கு நியமனம் வழங்கியுள்ளார்.இப்படி செய்தால் அதிகாரிகள் ஊழல் மோசடி செய்யாமல் என்ன செய்வார்கள்?உடனடியாக இந்த மின்வெட்டு பிரச்சினைக்கு முடிவைக் காட்டுங்கள்.மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள் ”

என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்ரி.

ஜனாதிபதி தெரிவித்த இந்த அதிர்ச்சி தகவல்களைக் கேட்டு பிரதமரும் அமைச்சரவையும் சில நிமிடங்கள் அமைதியில் இருந்ததாக அறியமுடிந்தது.

T/N Sivaraja

6 comments:

  1. if the President starts to complain about everything without taking action to stop them where this country will go ? He must stop complaining and better remember he is the President of Sri Lanka and he is responsible to bring this country forward or resign and call for fresh elections so people can elect a President who can bring prosperity to this beautiful country.

    ReplyDelete
  2. Close to election.. All politicians exposing the shame of other parties are very common.

    I am sure... not only UNP, but also SLFP and other united groups also involved in such activities as president stated.

    All these wolfs from all parties trying to come to power not to serve the people but to earn and enjoy their own life by compromising the cost of living of citizens.

    Finally Shame on us, citizens... for electing and selecting these buffaloes to the parliament.

    ReplyDelete
  3. President is not to pass statement... But to take action against wrong doers if he is really to to serve the people.

    ReplyDelete

Powered by Blogger.