Header Ads



3 பேர் உடல்கருகி மரணமானது ஏன்..? (எரிந்து கொண்டிருந்த உடலங்களை வீடீயோ எடுத்த கேவலம்)


திடீர் மரணங்களை விட்டும் எங்களை பாதுகாத்தருள்வாயாக. (ஆமீன்)

வேகம், வேகம்,, அதீத வேகம்.....

வயது. வயது... இளவயது,....

சடப்பொருளைக்கூட தங்களால் கட்டுப்படுத்த முடியாத வீரம்.

இன்று -29- மாலைதான் காத்தான்குடியிலிருந்து பாசிக்குடா சென்ற இளைஞர்கள்.

மீண்டும் காத்தான்குடி நோக்கி செல்ல ஆயத்தமானபோது சகோதரர் அதீப் (20) என்பவர் தனது மற்றுமொரு நண்பரான சப்கான் மும்மமது என்பவரை ஏற்றிக் கொண்டு வேமாக பயணிக்க ஏனைய நண்பர்கள் பின்னால் ஊர் நோக்கி பயணிக்கிறார்கள்.

வந்தாறுமூலை அம்பலத்தடியை அண்மிக்கும் போது இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்தாறுமூலை பலாச்சோலையை சேர்ந்த இளைஞர்களான மோகன் மயூரன் (22),மற்றும் முருகுப்பிள்ளை பவித்திரன் (23) ஆகியோர்ஒரே திசையில் பயணிக்கிறார்கள்.

இரு மோட்டார் சைக்கிள்களும் ஒரே திசையில் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருக்க,

கணப்பொழுதில் ஒன்றில் ஒன்று மோதியவுடன் பெற்றோல் சடுதியாக வெளியேறி தீப்பற்றிக் கொண்டதால் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்களால் பிரிந்து செல்ல முடியாதவாறு தீ பரவிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மூன்று பேர் பலியாகியதுடன். மற்றையவர் (காத்தான்குடி சப்கான் முகம்மது) எரிகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் உடலங்களை ஓரிருவர் வீடீயோ எடுத்திருந்தாலும், பல இளைஞர்கள் அத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வெற்றியும் கண்டார்கள்.

அவ் இளைஞர்களுக்கு எனது நன்றிகளை மரணித்தவர்கள் சார்பாக தெரிவிதுக் கொள்கிறேன்.

சடலங்கள் மூன்றினையும் (அதீப், மயூரன், பவித்திரன் ) ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும்,

பிரேத அறையில் குளிரூட்டி இல்லாததால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்ஷாஅல்லாஹ் நாளை -30- பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

- MSM நஸீர் -

No comments

Powered by Blogger.