மதூஷுடன் டுபாயில் பிடிபட்ட 2 பேர், நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்காவில் கைதாகினர்
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேராவுடன் மேலும் ஒருவரும் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இருவரும் ப்லய் டுபாய் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எப்.இசட். 547 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பிரபல பாடகர் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவருமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Post a Comment