இலங்கையில் 27,000 கோடியை, தமிழக அரசியல்வாதி முதலிட்டாரா..? தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல்
தமிழகத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 27000 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகவும், அதை அவர் வேட்புமனுதாக்கலில் கணக்கு காட்டாததால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பா.ம.க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
மக்களவ தேர்தலுக்கான போட்டியில், அரக்கோணத்தில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியும், தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரனும், அ.ம.மு.க வேட்பாளர் பார்த்திபன் என மொத்தம் 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் மாற்று வேட்பாளர் சரவணன் தலைமையிலான பா.ம.க நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனை சந்தித்து தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மீது புகார் ஒன்றை தெரிவித்திருந்தனர்.
அதில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவி பெயரில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இலங்கையில் 27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகவும், அதை அவர் வேட்புமனுவில் மறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இப்படி மறைப்பது மிகப் பெரிய குற்றம், இதனால் அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் அதிகாரியோ, இலங்கை நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்யவில்லை. அதிலிருந்து, விலகிக்கொண்டதாக தெரிவிக்க, உடனே பா.ம.க-வினர் முதலீடு செய்வதிலிருந்து ஜெகத்ரட்சகன் விலகிக்கொண்டதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிகாரி இல்லை, ஆனால் ஜெகத்ரட்சகனின் வேட்புமனுவை மறுபரிசீலணைக்கு பின்னரே ஏற்றுக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பா.ம.க-வினர் இங்கே சொன்னால் கதையாகது என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஜெகத்ரட்சகன் மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment